ஞாயிறு, 26 ஜூலை, 2015

முடி கொட்டுவது நிற்க




முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

தலை முடி கருப்பாக வேண்டும், முடி 
கொட்டக்கூடாது, முடி வளர வேண்டும் என்று 
கவலையுடன் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் 
கை கொடுக்கும்.
சரக்கு வகை

சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 போத்தல்
சுத்தமான நல்லெண்ணெய் - 1 போத்தல்
சடாமஞ்சில் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
பொடுதலை நன்கு காய்ந்தது - 50 கிராம்
முறை
இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு காய்ச்சி இரு 
வாரம் சரக்குகளை ஊரப்போட்டு பின்னர் வடித்து 
எடுத்து பயன்படுத்தலாம்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை 
தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து 
அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து 
வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் 
எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது 
அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் 
தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து 
தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் 
முடி 
உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் 
கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது 
அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் 
தேய்த்து 
10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு 
குளித்தால் 
தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
இரும்புச்சத்து பற்றாக்குறை முடி 
கொட்டுவதற்கு 
முக்கிய காரணமாக இருக்கிறது.போதுமான 
அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் 
உடல்நலம் கடுமையாக 
பாதிக்கப்படும்.பேரீச்சம்பழம்,அசைவ 
உணவுகள்,வெல்லம்,முருங்கைக்கீரை 
போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் 
இருக்கிறது.

இச்சத்து உடலில் சேர உணவு உண்ட ஒருமணி 
நேரத்திற்காவது காபி,தேநீர் 
தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு 
போன்ற சி வைட்டமின் கொண்டவை 
இரும்புச்சத்து உடலில் கிரகிக்க 
அவசியம்.போதுமான 
வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் சேர்க்காத 
நிலையில் ஏற்படும்.உயிர்ச்சத்து அதிகமுடைய 
பழங்கள்,காய்கறிகளை சேர்ப்பது,போதுமான 
அளவு நீர் அருந்துவது,எட்டுமணி நேர தூக்கம் 
போன்றவை முடிக்கு மட்டுமல்லாமல் ஒட்டு 
மொத்த ஆரோக்கியத்தை காக்கும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை 
அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் 
ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து 
மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி 
கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல 
இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். 
கருகருவென முடி வளரத் தொடங்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக