செவ்வாய், 13 ஜனவரி, 2015

சித்த மருத்துவக் குறிப்புகள்

பயன்மிக்க சித்த மருத்துவக் குறிப்புகள் :-
ஆண்மைக் குறைவு நீங்க : தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரத்திற்கு முன் ஒரு மாதுளம் பழம் முழுவதும் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க : அடிக்கடி மாம்பழத்தைச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்
.
கருவுற்றிருக்கும் தாய்ய்ய்ய்மார்களுக்கு : கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழத்தைச் சாப்பிட்டு வர, பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
மலச்சிக்கல் தீர : மலச்சிக்கலில் சிரமப்படுவோர் இரவில் மாம்பழத்தைச் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் சரியாகும்.
பற்களும் ஈறுகளும் உறுதியடைய : நெல்லிக்கனியைப் பற்களிளால் நன்றாக மென்று தின்று வர பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.
இரத்த கொதிப்பு குணமாக : இரத்த கொதிப்பு நோய் கொண்டவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வர, இரத்தக் கொதிப்பு நோய் குணமாகும்.



அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள் :-
* காலை 5 .30 மணிக்கு : தேன் கலந்து ஒரு தம்ளர் எலுமிச்சை ஜூஸ் பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும். எந்தப் பிரச்சனையும் சீக்கிரத்தில் அண்டாது.
* காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு தம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும்.
* காலை 9.30 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும்.
* காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட். இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும்.
* மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.
* இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது தால். வயிறை மிதமாக வைத்திருக்கும்.
இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது. சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும். தெரப்பியே தேவையில்லை என்பதுபோல், உணவிலும் உற்சாகமாக வைத்திருக்க... இந்த உணவைப் பின்பற்றுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக