சனி, 25 ஜூலை, 2015

கண் பார்வை from எள்ளுப் பூக்கள்..!





கண் பார்வையை தெளிவாக்கும் எள்ளுப் 

பூக்கள்..!

உடலுக்கு சக்தி தரும் எள் போல 

எள்ளுச்செடியின் மலர்களும் மருத்துவ குணம் 

கொண்டுள்ளது.

தூய வெண்மை நிறம் கொண்ட எள்ளுப்பூக்கள் 

அழகிய வடிவம் கொண்டவை. சங்க காலம் 

முதல் தற்கால கவிஞர்கள் வரை 

எள்ளுப்பூக்களை பெண்களின் நாசிக்கு 

ஒப்பிடுகின்றனர். எள்ளுச்செடிகளில் புதிதாக 

பூக்கும் பூக்களை தினமும் பறித்து பச்சையாக 

சாப்பிட்டு மோர் பருகிவர கண் தொடர்பான 

நோய்கள் நீங்கும்.


மங்கலான பார்வை தெளிவடையும்

எள் செடியில் இருந்து பூவைப் பறித்து பற்களில்

படாமல் விழுங்கிவிட வேண்டும்.

ஒவ்வொன்றாக விழுங்க முயற்சி செய்ய

வேண்டும். மொத்தமாக அள்ளிப் போடக்கூடாது.

ஒரே நேரத்தில் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக

எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை

வருடங்களுக்கு கண் வலி வராது. மங்கலான

பார்வை தெளிவடையும்.

கண்களில் பூ விழுந்தவர்களுக்கு

பேரிச்சம்பழக்கொட்டையும், மான் கொம்பின்

ஒரு பகுதியையும், தாய்பாலில் இழைத்து

அத்துடன் எள் பூவையும் கசக்கி இழைத்து

சேர்த்து கண்களில் மை போல போட்டு வர, பூ

விழுந்ததால் பார்வைக்குறைவு வந்தவர்கள்

குணம் பெறுவார்கள்.

கண் எரிச்சல், கண் பார்வை மந்தம் உள்ளவர்கள்


கைப்பிடியளவு எள்ளுப்பூவை ஒரு சட்டியில்

போட்டு பதமாக வதக்கி சூடு ஆறியதும், கண்கள்

மீது வைத்துக் கட்டி விட வேண்டும். இதைப்

படுக்கப் போகும் போது செய்யவும். காலையில்

அவிழ்த்து விட வேண்டும். குணம் கிடைக்கும்

வரை இதனை தொடர்ந்து செய்யவும்.

எள்ளுப்பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட தேன்

உடலுக்கு பலத்தை தரும்.

சர்க்கரை நோயை விரட்ட





ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட 
 வேண்டுமா? 
*
*********************************************************************
**********
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் 
ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய 
வழி இதோ...
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி 
வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி (தனியா) - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை வெறும் கடாயில் 
பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி 
செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் 
(இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு 
டம்ளராக சுண்டக் காய்ச்சவும்.

பின்பு வடிகட்டி கட்டவும். தினமும் மூன்று வேலை 
சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக 
சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி 
நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) 
உண்ணக்கூடாது.
இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் 
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு 
வார
இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் 
முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து 
கொள்ளுங்கள்.

வெள்ளி, 24 ஜூலை, 2015

தூங்கும் முறை


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் 

உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் 

நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் 

என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. 

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் 

குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் 

தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.


இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன 

தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் 

ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்


கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ்

சிலரை


நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ்

சிலரை


நம்பிக் காண் .

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி

மயக்கம், தெளிவின்மை,

ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,


பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை,

மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்

என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக்

கூறியுள்ளனர்.

.

உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது

மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால்

ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால்

கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து

தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும்

ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில்

இருந்து வரும் காந்தசக்தி

தலையில் மோதும் போது அங்குள்ள பிராண

சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்

படுவதுடன்,


இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி

உண்டாகும். மேலும் மல்லாந்து

கால்களையும்,கைகளையும்


அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.

இதனால் இவர்களுக்குத் தேவையான

ஆக்ஸிஜன்

(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல்

குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,

தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும்,

வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து

தூங்க

வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம்

சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம்

மட்டுமே சுவாசம்

வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.

மேலும் இதனால் உடலுக்குத் தேவையான

வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை

அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில்

சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து

இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது

பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம்

ஓடும்.

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம்

வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி

உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப்

போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம்

அனைவரின் நன்மைக்கே, இதை நாமும்

பின்பற்றி பயன் பெருவோம்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

மூல நோய் Cure in simple ways !!!


மூல நோய் Curing simple ways !!!
ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் 
வீங்கிப்பருத்து வெளிவரு வதைத்தான் 
மூலநோய் என்கிறார்கள்.

மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும்போது, மலம் 
வெளியேறாமல் உள்ளுக் குள்ளேயே நின்று 
இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற 
முற்படும்போது மலவாய்க் குடலில் இருந்து 
சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியே 
தள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன.


தவிர, காய்ந்த மலம் ஆசனவாயைக் 
கிழிப்பதால் 
ரத்தம் பீறிட்டு வெளியே வரும். ஒவ்வொரு 
நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும்போது அந்த 
வாய்ப் பிளந்து கொள்ளும். இதை பிஸ்ஸர் 
அல்லது ஆசனவாய் வெடிப்பு என்கிறார்கள்.

இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் 
அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ 
மூலங்கள் உண்டாகின்றன.

ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரி, 
இரண்டாவது டிகிரி, மூன்றாவது மற்றும் 
நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப் 
பிரிப்பார்கள். ஆனால் நமது தமிழ் 
முன்னோர்கள் 
இதை இருபத்தோரு வகைகளாகப் பிரித்தார்கள்.
அவை:

நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று 
மூலம், வரண் மூலம், ரத்த மூலம், 
வினைமூலம், 
மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்திமூலம், 
சூத 
மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், 
தமரக மூலம், வாத மூலம், பித்த மூலம், 
சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு 
மூலம்.

இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை 
என்பதால் இவற்றை நவமூலம் என்றும் 
சொன்னார்கள்.

நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை 
குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை 
ஓலைச் சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள்.

அதனடிப்படையில் மூலநோய்க்கு 
பிரத்யேகமான மூலிகை மருந்துகள் 
தயாரிக்கப்பட்டு அளிக்கும்போது பக்க 
விளைவுகள் இல்லாமல் மூலநோய் குணமாகும்.

ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும் 
உள்ளன, ஒரே வாரத்தில் குணமாகும் 
மருந்துகளும் சித்த மருத்துவத்தில் 
சொல்லப்பட்டுள்ளன.

இதனால் உள் மூலம் குணமாகும், வெளிமூலம் 
சுருங்குகிறது. ஆசனவாயில் இருக்கும் 
சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றன. மல 
ஜலம் சுலபமான முறையில் வெளியேறுகிறது. 
மீண்டும் வருவதில்லை.

உதாரணத்திற்கு ஒரு மூலிகையைப் பற்றி 
தெரிந்துகொள்ளுங்கள்.

துத்திக் கீரை என்ற ஒன்றை 
கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக் கீரையை 
தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் 
மூலநோய் தலைக் காட்டாது. எத்தகைய 
மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலைமீது 
விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி 
மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டிவிட, கட்டி 
உடைந்துவிடும். மூல முனைகள் உள்ளுக்குச் 
சென்றுவிடும். வேண்டுமானால் நீங்கள் கூட 
செய்து பார்க்கலாம்.

துத்திக்கீரயின் மற்ற பயன்கள்:

இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் 
பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.
மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ் 
சாலவதக் கிக்கட்டத் தையலே - மேலுமதை 
எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும் 
இப்படியிற் றுத்தி யிலையை (அகத்தியர் 
குணபாடம்)
மலச்சிக்கல் தீர
மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் 
கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி 
நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன 
உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் 
அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் 
மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் 
இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை 
நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் 
பாசிப்பருப்பு 
சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது 
நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் 
தீரும்.
மூல வியாதி குணமாக
காரமும், புளிப்பும் உணவில் அதிகம் 
சேர்ப்பதால் 
சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு 
வாய்வுக்கள் 
சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. 
இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக 
மாறுகிறது.
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் 
துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக 
நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன 
வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் 
இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு 
வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் 
குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.
உடல் சூடு தணிய

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக 
நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். 
நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன 
வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு 
உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் 
சூடு தணியும்.

வெப்பக்கட்டி குணமாக
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு 
(விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி 
வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி 
வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.

துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் 
சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி 
வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
பல்ஈறு நோய் குணமாக

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க 
வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து 
வந்தால் 
பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

குடல் புண் ஆற
துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் 
சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

சிறுநீர் பெருக்கி

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக 
நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை 
இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு 
பிரியும். 
சிறுநீரக நோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் 
வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் 
ஆரோக்கியத்தோடு வாழலாம்.

மூல நோய் விரட்ட02
எல்லாவகை மூல நோய்களுக்கும் பக்குவமான 
மருந்து இது. கிராமங்களில் கிடைக்கும் 
மருந்து.அதுதான் வேப்பமுத்து. அதன் பருப்பை 
நன்றாக அரைக்க வேண்டும். ஒரு பாக்கின் 
அளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட 
வேண்டும். மாலையிலும் ஒரு பாக்கு அளவு 
அரைத்து உருட்டிச் சாப்பிட வேண்டும். 
இப்படியே 
(ஒரு மண்டலம்) நாப்பத்தெட்டு நாள் 
சாப்பிடணும். பத்தியம் உண்டு. அதாவது,மூல 
வியாதிக்கு மருந்து சாப்பிட்டு முடியும் 
வரை,உடல் உறவு கூடாது.சூடு உண்டாக்கி 
மூலம் அதிகமாகும். அருகம்புல் சாறு 
நல்லது.நாள்தோறும் அதிகாலையில் 
அரைக்கால் படிசாறு குடித்து வமவுனம் என்னும் 
மந்திரமொழி

சனி, 11 ஜூலை, 2015

varicose veins


"வெரிகோஸ் வெயின்" (varicose veins) 

பிரச்னைக்கு தீர்வு

*

*

நீண்ட நேரம் நின்று பணி புரியும் 

பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் 

வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு. 

*

அது போல பலருக்கு கால் தொடைக்கு 

கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு 

பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் 

கொண்டதைப் போல இருப்பதைப் 

பார்த்திருப்பீர்கள்.

*

முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய 

நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு

*

சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் 

தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். 

இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் 

உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு 

வனத்துறையின் விற்பனை அங்காடியில் 

கிடைக்கும்.

*
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து 

வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு 

பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் 

தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து 

பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் 

கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் 

உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் 

பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் 

எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் 

தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி 

மஞ்சள் பூசலாம்)

*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*

முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, 

ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ 

உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த 

வேண்டாம்.

*

48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
*
*
*
நன்றி:- மூலிகை மர்மங்கள்.


திங்கள், 25 மே, 2015

பூரான் கடிக்கு

பூரான் கடிக்கு க்கான பட முடிவு



பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்.
விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.
வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.
உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.
பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.
பூரான் கடியை தீர்க்க மருந்து
குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.
வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.
மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.
ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் - கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

வெள்ளி, 30 ஜனவரி, 2015

மூலிகைப் பொடி Names & Benefits



மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-
*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்